“மெகா” திட்டங்கள்

மெகா திட்டங்கள்

மெகா திட்டங்கள்

Advertisements

மே 11, 2009 at 8:05 பிப பின்னூட்டமொன்றை இடுக

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழகத்திற்கு அளித்த நன்மைகள்

தமிழகத்திற்கு நன்மைகள்

தமிழகத்திற்கு நன்மைகள்

மே 11, 2009 at 8:01 பிப பின்னூட்டமொன்றை இடுக

கலை வளர்த்தோம்! கலாச்சாரம் காத்தோம்!!

கலைத்தமிழ்

கலைத்தமிழ்

மே 11, 2009 at 7:55 பிப 1 மறுமொழி

வேலியில் போகும் ஓணானை எடுத்து…

எலியார்: இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று, ஏன் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வேண்டும்?

பூனையார் : அமெரிக்காவும், ஜப்பானும் பொருளாதார வளர்ச்சியில் உலகில் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. அங்கெல்லாம், மக்கள் தங்கள் வேலையை இழந்து, தாங்கள் வசிக்கும் வீடுக்ளை இழந்து, பூங்காக்களில் உறங்கி, காலையில் வரிசையில் நின்று ஒரு கோப்பை ஓட்ஸ் க்ஞ்சியை தானமாகப் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஏனென்றால் கடந்த ஒரு வருட காலமாக உலகம் சந்தித்து வரும் பொருளாதார சரிவுதான் (Recession) காரணம். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பியக் கூட்டமைப்பு ஆகியவற்றில், தற்போது எதிர்மறை பொருளாதாரச் (Negetive GDP) சூழ்நிலையில், தொழில் வளர்ச்சிக்குப் பதிலாக, தொழில்கள் நசிவடைந்து, தொழிற்சாலைகள்  எல்லாம் மூடப்பட்டு, பெரும்பாலான மக்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

ஆனால், இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சராசரியாக 8 சதவிகதப் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டு பொருளாதார் வளர்ச்சி 6 சதவிகதமாக இருக்கும் என கணிக்கிறார்கள். எப்படி? மன்மோகன் சிங்கை பிரதமராகக் கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால்தான் சாத்தியமாயிற்று. இந்த பொருளாதார வளர்ச்சியினால் வருமைக் கோட்டுக்குக் கீழுள்ள கோடிக்கணக்கான மக்களை நடுத்தர வர்க்கமாக கைதூக்கி விட்டிருக்கிறார் மன்மோகன் சிங். இந்தியாவில் இன்னும் தலை விரித்தாடும் வருமையை முழுவதுமாக ஒழிக்க இதேபோல 8 சதவிகித வளர்ச்சி இன்னும் பத்து ஆண்டுக்ளுக்கு தொடர வேண்டும். அதற்கு இந்த நாட்டை வழி நடத்த பிரதமர் மன்மோகன் சிங்கைவிட பொருத்தமான ஆள் வேறு யார் இருக்கிறர்கள்?

மூன்றாவது அணியா? அந்தக் கூட்டணியில் உள்ளக் கட்சிக்ளுக்கு தேசிய அளவிலான எந்தக் கொள்கையும் கிடையாது. அதோடு கம்யூனிஸ்டுகளோ நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் 40 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறார்க்ள்.

பா.ஜ.க. வா? அது மதவாதத்தைப் பயன்படுத்தி, வன்முறையைத் தூண்டி, நாட்டைத் துண்டாட நினைக்கும் கட்சி. சிறுபான்மை மதத்தினரை அடக்கி ஆளும் ஒரே கொள்கையோடு, தீவிரவாதத்தைத் தூண்டி, அண்டை நாடுகளுடன் போரிட்டு,  நாட்டின் பொருளாதாரத்தை அதள பாதாளத்திற்கு கொண்டு செல்லும் கட்சி.

இந்த உலக பொருளாதார மந்த நிலையில் நம் நாட்டை வழி நடத்தும் தகுதி உடையவர் மன்மோகன் சிங் மட்டுமேதான். அவர் உலகத்தில் உள்ள தலை சிறந்த பொருளாதார வல்லுனர்களில் ஒருவர். அவர் ஆயுள் முழுக்க பொருளாதாரத் துறையிலே வெற்றிகரமாக பணியாற்றியவர்.
பொருளாதாரத் துறையில் பேராசிரியராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்,

ஐக்கிய நாடுகள் சபையின் தொழில்துறை வளர்ச்சி அமைப்பின் செயலாளராக,

மத்திய வணிகத்துறையின் பொருளாதார ஆலோசகராக,

மத்திய நிதித் துறையின் பொருளாதார ஆலோசகராக,

மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் செயலாளராக,

மத்தியத் திட்டத்துறைத்(Planning Commission) துணைத் தலைவராக,

ரிசர்வ் வங்கியின்(றெஸெர்வெ Bஅன்க் ஒஃப் ஈன்டிஅ) கவர்னராக,

இந்திய பிரதம மந்திரியின் ஆலோசகராக,

UGC யின் (University Grants Commission) தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.

1991ஆம் அண்டு நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில், மத்திய நிதித்துறை மந்திரியாகப் பொருப்பேற்று, பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தி, உலகமே வியக்கும் அளவுக்கு இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் திருப்பினார். தொடர்ந்து வரும் அரசாங்கங்களும் அவர் வகுத்த அதே வளர்ச்சிப் பாதையிலேயே செல்கின்றன.

இந்த ஐந்து ஆண்டுகளில் மன்மோகன் சிங் த்லைமையிலான, மதச்சார்பற்ற, ஐக்கிய முற்ப்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளே அதற்கு உதாரணம்.

1. நாடு சராசரியாக 8 சதவிகித வளர்ச்சியை எட்டியது. அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியது

2. தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம், கிராமப்புற மக்களுக்கு, விவசாயம் இல்லாத நாட்களில், 100 நாட்க்ள் வேலையும், தினமும் 80 ரூபாய் கூலியும் கொடுத்து அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது.

3. விவசாயிகளின் 60,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்தது. விவசாயக் கடனின் வட்டியைக் குறைத்தது.

4. கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் மூலம், அனைத்து கிராம ம்க்களுக்கும் தரமான மருத்துவ வசதி செய்து கொடுத்தது.

5. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசாங்கச் செயல்பாடுகளை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் ஆக்கியது.

6. தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவு படுத்தியது.

7. உயர் கல்வி நிறுவனங்களில், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது.

8. குடும்ப வன்முறை (பெண்களுக்கெதிரான) தடுப்புச் சட்டம் கொண்டுவந்தது.

9. ஜவகர்லால் நேரு தேசிய நகர் சீரமமைப்பு திட்டத்தின் மூலம் நகர்ப்புற கட்டமைப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

10. ஏழை மக்களுக்கு உயிர்க்காப்பீட்டுத் திட்டமும் (Life Insurance Cover), மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் (Medical Insurance) செயல்படுத்தப்படுகிறது.

11. நாட்டின் மின்சாரத் தேவை இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், சுற்றுப்புற சூழலுக்குப் பாதுகாப்பான, மின்சார தேவையை பூர்த்தி செய்ய அணு உலைகள் அமைக்கவும்,  அணுசக்தி எரிபொருள் பெறவும் உலக நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

தமிழகத்திலும், மத்திய அரசுக்கு இணக்கமான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பங்கு பெற்றுள்ள  தி.மு.க. அரசு கடந்த மூன்று ஆண்டுக்ளாக, மத்திய அரசின் ஒத்துழைப்புடன், பல மக்கள் நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

1)  ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி

2)  50 ரூபாய்க்கு மானிய விலையில் மளிகைப் பொருட்கள்

3)  ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்

4)  11 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகள்.

5)  1 இலட்சத்து 75 ஆயிரம் ஏழை விவசாய குடும்பங்களுக்கு இலவச நிலம்.

6)  6 இலட்சத்து 50 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்.

7)  பள்ளி மாணவர்க்ளுக்கு சத்துணவுடன் வாரம் 3 முட்டைகள், வாழைப்பழம்.

8)  பள்ளி மாணவர்களுக்கு அரசுத் தேர்வுக் கட்டணங்கள் ரத்து, கலை அறிவியல் கல்லூரி மாணவர்க்ளின் படிப்புக் கட்டணங்கள் ரத்து. அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்.

9)  ஏழைப் பெண்கள் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய், கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவி.

10)  ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

11)  விவசாயிகளின் 7000 கோடி ரூபாய் கடனை ரத்து செய்தது. விவசாயக் கடன் வட்டியை 4 சதவிகதமாகக் குறைத்தது.

சமுதாய மறுமலர்ச்சித் திட்டங்கள்:

1.  தமிழை செம்மொழியாக அறிவித்தது.

2.  தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தது.

3.  பனிரெண்டாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமெனச் சட்டம்.

4.  அருந்தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாகியது.

5.  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்

6.  அருந்ததி இனத்தவர்க்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு

7.  முஸ்லிம் சமுதாயத்தினர்க்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு

மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்:

1)  மீஞ்சூர், நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

2)  சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

3)  ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்

4)  இராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம்

5)  56,000 கோடு ரூபாய் செலவில் தமிழகத்தில் நான்கு வழிச்சாலைகள், மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கம் செயல்ப்டுத்தப்பட்டது.

6)  சேது சமுத்திரத் திட்டம்

7)  50 காசுக்கு இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வகை செய்தது. கைத்தொலைபேசிக் கட்டணங்க்ளைக் குறைத்தது.

8)  சென்னையில் NSG பாதுகாப்பு.

9)  மத்திய பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமைவது.

இப்படி, மத்திய மாநில அரசுகள் மக்கள் நலத் திட்டங்களின் மூலம் சாதனைகளையே செய்து வருகின்றன. அதனால், இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதம வேட்பாளர்,பொருளாதார வல்லுநர் மன்மோகன் சிங்தானே மீண்டும் பிரதமராக வேண்டும்.

அதைவிடுத்து, மற்றவர்களின் வெற்று வாக்குறுதிகளை நம்பி,
வேலியில் போகும் ஓணானை எடுத்து, வலிய வேட்டிக்குள் விடுவானேன்?

மே 9, 2009 at 5:30 முப 4 பின்னூட்டங்கள்

துணிச்சல்காரரா ஜெ?

எலியார்: அம்மையார் துணிச்சலான அரசியல்வாதி என்று பொதுமக்கள் சொல்கிறார்களாமே?

பூனையார் : சட்டமன்றத்திலே எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த போது, முதல்வரைத் தாக்கிக் கலகத்தை உண்டாக்கிவிட்டு, வெளியில் வந்து, ஆளுங்கட்சியினர் என்னை மானபங்கப்படுத்த முயற்சித்தார்கள் எனக் கூற அசாத்தியமான துணிச்சல் வேண்டும்தான்.

மாநிலத்தின் முதல்வராக இருந்தபோதே, கொம்பூன்றாமல் எழுந்து நடக்க முடியாத தள்ளாடும் ஆளுநர் சென்னா ரெட்டி, தன்னிடம் தவறாக் நடந்து கொள்ள முயற்சித்தார், என ராஜ்பவன் வாசலில் நின்று சொல்ல அருவருப்பாத் துணிச்சல் வேண்டும்தான்.

ராஜீவ்காந்தி படுகொலையினால், அதிமுக அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததும், ராஜீவ் மரணத்தினால் ஒன்றும் நான் வெற்றி பெறவில்லை எனக் கூற நன்றிகெட்டத் துணிச்சல் வேண்டும்தான்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் யாரும் வாடகைக்கு வீடு கொடுக்கக் கூடாது, அவர்களால்தான் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகிறது என சட்டமன்றத்திலே முதல்வர் ஜெயலலிதா முழங்குவதற்கு அவருக்கு இரக்கமில்லா துணிச்சல் இருக்கத்தானே வேண்டும்.

ஊழல் பணத்திலே கோடிக்கணக்கில் செலவு செய்து வளர்ப்பு மகன் திருமணத்தை நடத்துவதற்கும், 27 கிலோ வைரம் பதித்த தங்க நகைகள்,  10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேலைகள், 750 காலணிகளை வாங்குவதற்கு பணக்காரத் துணிச்சல் இருக்கத்தானே வேண்டும்.

பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து குற்றவாளிக் கூண்டிலே நிறுத்த வேண்டும் என சட்டசபையிலே தீர்மானம் நிறைவேற்ற ஜெயலலிதாவிற்கு புரட்சிகரத் துணிச்சல் இருக்கத்தானே வேண்டும்.

சோனியாவின் பழையப் பெயரைக் குறிப்பிட்டு நாகரீகமற்ற முறையில் தரமதாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்து விட்டு, தேர்தல் வந்ததும் கூட்டணிக்கு அழைக்கும் சந்தர்ப்பவாதத் துணிச்சல் அம்மையாருக்கு மட்டும்தான் உண்டு.

போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள் எனவும், அடுத்த நாட்டின் பிரச்சினையில் தலையிட நமக்கு அதிகாரம் இல்லை என்றும் சொல்ல  அம்மையாருக்கு கொடூரமானத் துணிச்சல் இருக்கத்தானே வேண்டும்.

தேர்தல் வந்ததும், என்னால் மட்டும்தான் ஈழம் பெற்றுத் தர முடியும் எனக்கூறி, மக்களை முட்டாளாக்கும் துணிச்சல் அம்மையாருக்கு மட்டும்தானே இருக்கிறது.

துரோகி எனவும், எதிரி எனவும் வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு, ஆரியப் பார்ப்பணர்களுக்கு அடிமையாக்கும் வித்தைக்கு தமிழினம் ஆளாகி, ஆயுள் முழுக்க ஒற்றுமை இல்லாமல் ஆரியனுக்குப் பல்லக்குத் தூக்கும் இழி நிலைதானா என் தமிழ் இனத்திற்கு வாய்த்திருக்கிறது ?.

மே 5, 2009 at 7:12 பிப பின்னூட்டமொன்றை இடுக

பேயாட்டம் ஆடிய ஜெயா

எலியார்:  40 இடங்களையும் எனக்கு கொடுத்து, நான் கை காட்டும் அரசு மத்தியில் அமைந்தால், ஈழம் பெற்றுத்தருவேன் என்று அம்மையார் கூறியிருக்கிறாரே?

பூனையார் :  அந்த வாய்ப்பை மக்கள் ஒரு முறை அவருக்குக் கொடுத்தார்கள், ஆனால் அவர் அதை மக்கள் நலனுக்காப் பயன்படுத்தாமல் தன்னலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டார், அதன் பின் மக்கள் மத்திய அரசுக்கு கை காட்டும் அதிகாரத்தை அம்மையாருக்கு கொடுக்கவேயில்லை.

1991ல் ராஜீவ் காந்தி படுகொலையின் அனுதாப அலையில் அதிமுக, மாநிலத்திலும் மத்தியிலும் அமோக வெற்றி பெற்றது. அப்போது மத்தியில் கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு தர நரசிம்மராவ் மைனாரிட்டி அரசைதான் நடத்திக்கொண்டிருந்தார். இவர் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்காமல் தனது வாய்க்கொழுப்பால் அதைக் கெடுத்துக்கொண்டார்.
சட்டமன்றத்துக்கு முதன் முதலாக முதல்வராக சென்ற இவர்,

இராஜீவ் காந்தி அவர்கள் எதிர்பாராத வகையில் கயமைப் பண்பும், மிருக உணர்ச்சியும் கொண்ட சதிகார கும்பலின் தூண்டுதலாலும், தீய நடவடிக்கையாலும் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட துயரச் செய்தி இப்பேரவையினர்க்கு ஆற்றொணாத் துக்கத்தை அளிக்கிறது

என ராஜீவ் காந்திக்கு இரங்கல் தெரிவித்து, சபையை ஒத்தி வைத்து விட்டு, வெளியில் வந்து செய்தியாளர்களிடம்,

ராஜீவ் மரணத்தின் அனுதாப அலையினால் ஒன்றும் நான் வெற்றி பெறவில்லை, மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிபெற வத்திருக்கிறார்கள்” என்க்கூறி காங்கிரஸ் உறவை அன்றே கைகழுவினார்.

1996 முதல் 1998 வரை, தானே பிரதமர் என்ற கனவில், டீ பார்ட்டிகளுக்குச் சென்று பொழுதைக் கழித்தாரே ஒழிய யாருக்கும் அரசு அமைக்க ஆதரவு தரவில்லை. 1998 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து  முதன் முதலாக வாஜ்பாய் அரசில் பங்கெடுத்தார். 13 மாதங்களில் ஆட்சியைக் கவிழ்த்தார். எதற்கு, ஈழம் பெற்றுத்தரவில்லையென்றா? 1991 முதல் 1996 வரை தமிழகத்தில் அவர் ஆடிய பேயாட்டத்தின் விளைவாக அவர் மீது போடப்பட்ட ஊழல் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், புலிகள் நடமாட்டம் இருக்கிறதென்று கலைஞர் அரசைக் கலைக்கவும் நிர்பந்தித்தார். அது நிறைவேறவில்லை என்ற காரணத்திற்காக, மக்களின் மீது குறுகிய காலத்திற்குள் இன்னொரு தேர்தலைத் திணித்தார்.

இவர் மத்திய ஆட்சியில் மக்களுக்காகவாப் பாடுபட்டார், அந்த நல்ல மனிதர் வாஜ்பாயை தன்னலத்துக்காகப் பாடாய்ப்படுத்தினார். ஆட்சி கலைந்த நாளில் வாஜ்பாய் சொன்னார் “இன்றுதான் நான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்”, என்றால் அவர் எந்த அளவுக்கு துன்பப்பட்டிருப்பார்?

அதன்பின்தான் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு 1998  முதல் 2009 வரை மத்திய அரசுக்குக் கை காட்டும் அதிகாரத்தை மக்கள் அம்மையாருக்குக் கொடுக்கவேயில்லை.

இன்னொரு முறை கொடுத்தால் அவர் கலைஞர் அரசைக் கலைக்கத் தமிழகத்துக்குத்தான் இராணுவத்தை அனுப்புவாரே தவிர, ஈழம் பற்றி அவர் ஏன் கவலைப்படப் போகிறார்?

********************************************************************

எலியார்:   “மதுரையில் கருணாநிதி மகனை எதிர்த்து பேச உள்ள நிலையில், எனது பிரசாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்” என்று அம்மையார் சிவகாசி பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறாரே?

பூனையார் :  இது என்ன பிரமாதம், அவர் இந்த மாதிரி எவ்வளவோ “டகால்டி” பேச்சு எல்லாம் பேசியிருக்கிறார்?

சட்டசபையிலே என்னை மானபங்கப்படுத்த முயற்சித்தார்கள், ஆளுநர் சென்னாரெட்டி என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார்” , இப்படி பலப்பல. இதை விட “உட்டாலக்கடி” பேச்சு ஒன்று இருக்கிறது. விபரம் கீழே.

1991-1996 ஆட்சிக்காலத்திலே அம்மையார் ஆடிய பேயாட்டத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.முதன் முறையாக ஆட்சி அமைத்த மமதையில் ஊழல், ஊழல், சுடுகாட்டிலிருந்து செருப்பு வரை ஊழல். எல்லாம் ஊழல் மயம். அதை விட அவரது வளர்ப்பு மகன் திருமணத்திற்கு, அரசாங்க இயந்திரங்களை எல்லாம் தவறாகப் பயன்படுத்தி, நூறு கோடி ரூபாய் செலவில் நடந்த கோலாகல விழாவும், அதில் முதலும் கடைசியுமாக சென்னை வீதிகளில் தனது பொற்பாதம் படிய நடந்து, பக்தகோடிப் பெருமக்களுக்கெல்லாம் தன் தோழியுடன் தங்கத் தாரகையாகக் காட்சியளித்தாரே, கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளியல் காட்சி, அதை பொது மக்கள் யாரும் மற்ந்திருக்க மாட்டார்கள்.

1996ல் கலைஞர் ஆட்சி வந்ததும், வரிசையாக ஊழல் வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. சிறப்புத் தனி நீதிமன்றங்களில் தினமும் வழக்கு விசாரணை. தினமும் நீதிமன்ற வாசல் படிகளில் எறி இறங்கினார். வாய்தா மீது வாய்தா வாங்கி வழக்குகளை கால தாமதப் படுத்தினார். விரல் வலி, மூட்டு வலி, கால் வலி…இடுப்பு வலி, முதுகு வலி, தலை வலி, ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை, தமிழில் குற்றப்பத்திரிகை என எத்தனையோ காரணங்கள். இடையில் வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்துப் பார்த்தும் ஒன்றும் பயனில்லை.

டான்சி நில பேர வழக்கில் ஒரு வழியாக விசாரணை முடிந்து, இரண்டு ஆண்டு கால தண்டனை வழங்கப்பட்டது. அம்மையாரும் சில நாட்கள் சிறைக்குப் போய், ஜாமீனும் பெற்று திரும்பி வருவதற்கும் 2001 சட்டசபை தேர்தல் வருவதற்கும் சரியாக இருந்தது.

ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றிருந்தால் தேர்தலில் நிற்கக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. அதோடு ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யக்கூடாது என்பதும் விதி. ஆனால் அம்மையாருக்கு எதற்கு விதி எல்லாம், 6 கோடி மக்களின் முதல்வராக இருந்திருக்கிறோமே என்ற வெட்கம், மானம் எதுவும் இல்லாமல், இந்தியாவிலே முதன் முறையாக அவர் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணையம் அந்த நான்கு வேட்பு மனுக்களையும் நிராகரித்தது.

தனக்கு எதிராக சதி செய்து தனது வேட்பு மனுக்களை கருணாநிதிதான் நிராகரிக்கச் செய்துவிட்டார்” என்ற “உட்டாலக்கடி” பேச்சைத் தமிழகம் எங்கும் ஊர் ஊராகத் தெருத் தெருவாக்ப் போய் சொன்னார். மக்கள்தான் கோமாளிகளாச்சே, அவர் சொன்னதை நம்பி, அவ்ர் மீது பரிதாபப் பட்டு, அதிமுகவையே ஆட்சியில் அமர வைத்தார்கள்.

தேர்தலில் நிற்கவே தகுதியில்லாதவர், முதல்வராகவே பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார். வந்த வேகத்தில் பேயாட்டம் ஆட ஆரம்பித்துவிட்டார், தான் நியமித்த அரசு வக்கீல்கள் மூலம் அவரது ஊழல் வழக்குகளை எல்லாம் நீர்த்துப் போகச் செய்து ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார். அத்தோடு அவ்ருடைய பழி வாங்கும் குணத்தையும் காட்டி விட்டர்.

மேம்பால ஊழல் வழக்கு என்ற பெயரில், கலைஞர் கருணாநிதியை நடு ராத்திரியில் கைது செய்து, இழுத்து வந்து சிறையில் தள்ளியதை பார்த்து அன்று உலகமே அதிர்ச்சியில் உறைந்தது, தனது கண்டனத்தைத் தெரிவித்தது.  அத்தோடு, இந்தியாவிலேயே முதன் முதலாக முன் அனுமதி இல்லாமல் மத்திய மந்திரிகளையே கைது செய்தார்.

தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லாதவர், முதல்வராகவும் இருக்கத் தகுதி இல்லை, எனவே அவர் முதல்வராக இருந்த நான்கு மாத காலங்களும் செல்லாது(Null and Invalid) என 21, செப்டம்பர் 2001 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அம்மையார் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். தமிழ்நாட்டை ஆள்வதற்கு பெரியகுளத்தில் டீக்கடை நடத்திய அனுபவம் ஒன்றே போதுமானதாக இருந்தது. அம்மையார் வண்டியைப் பார்த்ததும் சாலையிலேயே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கும் நிரந்தர அடிமை என்ற தகுதியே முதல்வர் தேர்வுக்குப் போதுமானதாக இருந்தது. வழக்கு முடிந்ததும், மார்ச் 2002ல் மீண்டும்  முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் ஆட்சியில், வீராணம் திட்டம், மழை நீர் சேகரிப்புத் திட்டம், வீரப்பனைக் கொன்றது(?), கந்து வட்டி, லாட்டரி சீட்டுகளை ஒழித்தது போன்ற நல்லவைகளும் பேயாட்டத்தின் நடுவே நடந்தன.

அவர் ஆடிய பேயாட்டத்தில் மக்கள் பட்ட துன்பம் ஒன்றா, இரண்டா?

1. எஸ்மா, டெஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி, 1,70,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்க்ளை வேலை நீக்கம் செய்தது. பெண்கள் என்றும் பாராமல் நடு இரவில் அவர்களை வீடு தேடிச் சென்று கைது செய்து சிறையில் அடைத்தது.

2. திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது

3. பல வண்ணங்களில் குட்ம்ப அட்டை(Ration Card) வழங்கியும், H முத்திரை குத்தியும் மக்களைப் பாடாய்ப்படுத்தியது.

4. கட்டாய மதமாற்றத் தடுப்பு சட்டம்

5. கோயிலகளில் ஆடு, கோழி பலியிட தடை

6. பேருந்து கட்டணங்களை உயர்த்தியது.

7. சசிகலாவின் வேண்டாத உறவினர்களின் மீது கஞ்சா வழ்க்கு போட்டது.

8. ஆட்சியின் அவலங்கலை வெளியிடும் எல்லாப் பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்குப் போட்டது.

9. பத்திரிகை ஆசிரியர்களை கைது செய்து சிறையில் தள்ளியது.

10. கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்களைக் கைது செய்தது.

அவரது பேயாட்டம் 2004 பாராளுமன்ற தேர்தல் முடிவு வரும் வரை தொடர்ந்தது.

அம்மையார் ஆட்சியில் இவ்வளவு அனுபவித்தும், அவர் பேச்சைக் கேட்டு, அவருக்குத்தான் எனது வாக்கு என்று சொல்பவர்கள், மேலும் மேலும் துன்பப்படத் தயாராயிருகிறார்கள் என்றுதானே அர்த்தம். வாழ்க ஜனநாயகம்.

மே 4, 2009 at 10:25 முப 11 பின்னூட்டங்கள்

குலவழக்கு

எலியார் : கச்சத்தீவை மீட்க குலவழக்கப்படி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன் என்றுஅம்மையார் முழங்கியிருக்கிறாரே?

பூனையார் :  வழக்குத் தொடர வேண்டும் என்றால் எப்போது வேண்டுமானால் தொடரலாமே? ஏன் தேர்தல் வரும் வரைக் காத்திருக்க வேண்டும்? ஏன் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் முழங்க வேண்டும்?

பெங்கலூருவில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அவருடைய சொத்து குவிப்பு வழக்குக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாலே, நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளாவது விரைந்து முடியும், மக்களின் வரிப்பணமாவது மிச்சமாகும்.

மே 2, 2009 at 12:48 பிப 1 மறுமொழி

Older Posts Newer Posts


அண்மைய பதிவுகள்

காப்பகம்

நாட்காட்டி

செப்ரெம்பர் 2018
ஞா தி செ பு விய வெ
« மே    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

பரிந்துரைக்க

SocialTwist Tell-a-Friend

சாதனைகள் – ஒர் தொகுப்பு

குருவியாரும் பூனையாரும்

என்ன படம் பார்க்கலாம்?

★ நியூட்டனின் மூன்றாம் விதி
★ பசங்க
★ குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
★ அயன்
★ அருந்ததீ
★ காஞ்சிவரம்
★ யாவரும் நலம்
★ தநா 07 அல 4777
★ நான் கடவுள்
★ வெண்ணிலா கபடி குழு

HOT net

Swine Flu
Influenza A (H1N1) - WHO Update
WolframAlpha
Revolutionary new web software
TamilNet.com
pro-Tamil News Website
Kosmix.com
Guide to the Web
nano Housing
1 BHK - 3.9 Lacks