பேயாட்டம் ஆடிய ஜெயா

மே 4, 2009 at 10:25 முப 11 பின்னூட்டங்கள்

எலியார்:  40 இடங்களையும் எனக்கு கொடுத்து, நான் கை காட்டும் அரசு மத்தியில் அமைந்தால், ஈழம் பெற்றுத்தருவேன் என்று அம்மையார் கூறியிருக்கிறாரே?

பூனையார் :  அந்த வாய்ப்பை மக்கள் ஒரு முறை அவருக்குக் கொடுத்தார்கள், ஆனால் அவர் அதை மக்கள் நலனுக்காப் பயன்படுத்தாமல் தன்னலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டார், அதன் பின் மக்கள் மத்திய அரசுக்கு கை காட்டும் அதிகாரத்தை அம்மையாருக்கு கொடுக்கவேயில்லை.

1991ல் ராஜீவ் காந்தி படுகொலையின் அனுதாப அலையில் அதிமுக, மாநிலத்திலும் மத்தியிலும் அமோக வெற்றி பெற்றது. அப்போது மத்தியில் கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு தர நரசிம்மராவ் மைனாரிட்டி அரசைதான் நடத்திக்கொண்டிருந்தார். இவர் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்காமல் தனது வாய்க்கொழுப்பால் அதைக் கெடுத்துக்கொண்டார்.
சட்டமன்றத்துக்கு முதன் முதலாக முதல்வராக சென்ற இவர்,

இராஜீவ் காந்தி அவர்கள் எதிர்பாராத வகையில் கயமைப் பண்பும், மிருக உணர்ச்சியும் கொண்ட சதிகார கும்பலின் தூண்டுதலாலும், தீய நடவடிக்கையாலும் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட துயரச் செய்தி இப்பேரவையினர்க்கு ஆற்றொணாத் துக்கத்தை அளிக்கிறது

என ராஜீவ் காந்திக்கு இரங்கல் தெரிவித்து, சபையை ஒத்தி வைத்து விட்டு, வெளியில் வந்து செய்தியாளர்களிடம்,

ராஜீவ் மரணத்தின் அனுதாப அலையினால் ஒன்றும் நான் வெற்றி பெறவில்லை, மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிபெற வத்திருக்கிறார்கள்” என்க்கூறி காங்கிரஸ் உறவை அன்றே கைகழுவினார்.

1996 முதல் 1998 வரை, தானே பிரதமர் என்ற கனவில், டீ பார்ட்டிகளுக்குச் சென்று பொழுதைக் கழித்தாரே ஒழிய யாருக்கும் அரசு அமைக்க ஆதரவு தரவில்லை. 1998 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து  முதன் முதலாக வாஜ்பாய் அரசில் பங்கெடுத்தார். 13 மாதங்களில் ஆட்சியைக் கவிழ்த்தார். எதற்கு, ஈழம் பெற்றுத்தரவில்லையென்றா? 1991 முதல் 1996 வரை தமிழகத்தில் அவர் ஆடிய பேயாட்டத்தின் விளைவாக அவர் மீது போடப்பட்ட ஊழல் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், புலிகள் நடமாட்டம் இருக்கிறதென்று கலைஞர் அரசைக் கலைக்கவும் நிர்பந்தித்தார். அது நிறைவேறவில்லை என்ற காரணத்திற்காக, மக்களின் மீது குறுகிய காலத்திற்குள் இன்னொரு தேர்தலைத் திணித்தார்.

இவர் மத்திய ஆட்சியில் மக்களுக்காகவாப் பாடுபட்டார், அந்த நல்ல மனிதர் வாஜ்பாயை தன்னலத்துக்காகப் பாடாய்ப்படுத்தினார். ஆட்சி கலைந்த நாளில் வாஜ்பாய் சொன்னார் “இன்றுதான் நான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்”, என்றால் அவர் எந்த அளவுக்கு துன்பப்பட்டிருப்பார்?

அதன்பின்தான் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு 1998  முதல் 2009 வரை மத்திய அரசுக்குக் கை காட்டும் அதிகாரத்தை மக்கள் அம்மையாருக்குக் கொடுக்கவேயில்லை.

இன்னொரு முறை கொடுத்தால் அவர் கலைஞர் அரசைக் கலைக்கத் தமிழகத்துக்குத்தான் இராணுவத்தை அனுப்புவாரே தவிர, ஈழம் பற்றி அவர் ஏன் கவலைப்படப் போகிறார்?

********************************************************************

எலியார்:   “மதுரையில் கருணாநிதி மகனை எதிர்த்து பேச உள்ள நிலையில், எனது பிரசாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்” என்று அம்மையார் சிவகாசி பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறாரே?

பூனையார் :  இது என்ன பிரமாதம், அவர் இந்த மாதிரி எவ்வளவோ “டகால்டி” பேச்சு எல்லாம் பேசியிருக்கிறார்?

சட்டசபையிலே என்னை மானபங்கப்படுத்த முயற்சித்தார்கள், ஆளுநர் சென்னாரெட்டி என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார்” , இப்படி பலப்பல. இதை விட “உட்டாலக்கடி” பேச்சு ஒன்று இருக்கிறது. விபரம் கீழே.

1991-1996 ஆட்சிக்காலத்திலே அம்மையார் ஆடிய பேயாட்டத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.முதன் முறையாக ஆட்சி அமைத்த மமதையில் ஊழல், ஊழல், சுடுகாட்டிலிருந்து செருப்பு வரை ஊழல். எல்லாம் ஊழல் மயம். அதை விட அவரது வளர்ப்பு மகன் திருமணத்திற்கு, அரசாங்க இயந்திரங்களை எல்லாம் தவறாகப் பயன்படுத்தி, நூறு கோடி ரூபாய் செலவில் நடந்த கோலாகல விழாவும், அதில் முதலும் கடைசியுமாக சென்னை வீதிகளில் தனது பொற்பாதம் படிய நடந்து, பக்தகோடிப் பெருமக்களுக்கெல்லாம் தன் தோழியுடன் தங்கத் தாரகையாகக் காட்சியளித்தாரே, கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளியல் காட்சி, அதை பொது மக்கள் யாரும் மற்ந்திருக்க மாட்டார்கள்.

1996ல் கலைஞர் ஆட்சி வந்ததும், வரிசையாக ஊழல் வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. சிறப்புத் தனி நீதிமன்றங்களில் தினமும் வழக்கு விசாரணை. தினமும் நீதிமன்ற வாசல் படிகளில் எறி இறங்கினார். வாய்தா மீது வாய்தா வாங்கி வழக்குகளை கால தாமதப் படுத்தினார். விரல் வலி, மூட்டு வலி, கால் வலி…இடுப்பு வலி, முதுகு வலி, தலை வலி, ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை, தமிழில் குற்றப்பத்திரிகை என எத்தனையோ காரணங்கள். இடையில் வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்துப் பார்த்தும் ஒன்றும் பயனில்லை.

டான்சி நில பேர வழக்கில் ஒரு வழியாக விசாரணை முடிந்து, இரண்டு ஆண்டு கால தண்டனை வழங்கப்பட்டது. அம்மையாரும் சில நாட்கள் சிறைக்குப் போய், ஜாமீனும் பெற்று திரும்பி வருவதற்கும் 2001 சட்டசபை தேர்தல் வருவதற்கும் சரியாக இருந்தது.

ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றிருந்தால் தேர்தலில் நிற்கக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. அதோடு ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யக்கூடாது என்பதும் விதி. ஆனால் அம்மையாருக்கு எதற்கு விதி எல்லாம், 6 கோடி மக்களின் முதல்வராக இருந்திருக்கிறோமே என்ற வெட்கம், மானம் எதுவும் இல்லாமல், இந்தியாவிலே முதன் முறையாக அவர் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணையம் அந்த நான்கு வேட்பு மனுக்களையும் நிராகரித்தது.

தனக்கு எதிராக சதி செய்து தனது வேட்பு மனுக்களை கருணாநிதிதான் நிராகரிக்கச் செய்துவிட்டார்” என்ற “உட்டாலக்கடி” பேச்சைத் தமிழகம் எங்கும் ஊர் ஊராகத் தெருத் தெருவாக்ப் போய் சொன்னார். மக்கள்தான் கோமாளிகளாச்சே, அவர் சொன்னதை நம்பி, அவ்ர் மீது பரிதாபப் பட்டு, அதிமுகவையே ஆட்சியில் அமர வைத்தார்கள்.

தேர்தலில் நிற்கவே தகுதியில்லாதவர், முதல்வராகவே பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார். வந்த வேகத்தில் பேயாட்டம் ஆட ஆரம்பித்துவிட்டார், தான் நியமித்த அரசு வக்கீல்கள் மூலம் அவரது ஊழல் வழக்குகளை எல்லாம் நீர்த்துப் போகச் செய்து ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார். அத்தோடு அவ்ருடைய பழி வாங்கும் குணத்தையும் காட்டி விட்டர்.

மேம்பால ஊழல் வழக்கு என்ற பெயரில், கலைஞர் கருணாநிதியை நடு ராத்திரியில் கைது செய்து, இழுத்து வந்து சிறையில் தள்ளியதை பார்த்து அன்று உலகமே அதிர்ச்சியில் உறைந்தது, தனது கண்டனத்தைத் தெரிவித்தது.  அத்தோடு, இந்தியாவிலேயே முதன் முதலாக முன் அனுமதி இல்லாமல் மத்திய மந்திரிகளையே கைது செய்தார்.

தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லாதவர், முதல்வராகவும் இருக்கத் தகுதி இல்லை, எனவே அவர் முதல்வராக இருந்த நான்கு மாத காலங்களும் செல்லாது(Null and Invalid) என 21, செப்டம்பர் 2001 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அம்மையார் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். தமிழ்நாட்டை ஆள்வதற்கு பெரியகுளத்தில் டீக்கடை நடத்திய அனுபவம் ஒன்றே போதுமானதாக இருந்தது. அம்மையார் வண்டியைப் பார்த்ததும் சாலையிலேயே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கும் நிரந்தர அடிமை என்ற தகுதியே முதல்வர் தேர்வுக்குப் போதுமானதாக இருந்தது. வழக்கு முடிந்ததும், மார்ச் 2002ல் மீண்டும்  முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் ஆட்சியில், வீராணம் திட்டம், மழை நீர் சேகரிப்புத் திட்டம், வீரப்பனைக் கொன்றது(?), கந்து வட்டி, லாட்டரி சீட்டுகளை ஒழித்தது போன்ற நல்லவைகளும் பேயாட்டத்தின் நடுவே நடந்தன.

அவர் ஆடிய பேயாட்டத்தில் மக்கள் பட்ட துன்பம் ஒன்றா, இரண்டா?

1. எஸ்மா, டெஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி, 1,70,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்க்ளை வேலை நீக்கம் செய்தது. பெண்கள் என்றும் பாராமல் நடு இரவில் அவர்களை வீடு தேடிச் சென்று கைது செய்து சிறையில் அடைத்தது.

2. திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது

3. பல வண்ணங்களில் குட்ம்ப அட்டை(Ration Card) வழங்கியும், H முத்திரை குத்தியும் மக்களைப் பாடாய்ப்படுத்தியது.

4. கட்டாய மதமாற்றத் தடுப்பு சட்டம்

5. கோயிலகளில் ஆடு, கோழி பலியிட தடை

6. பேருந்து கட்டணங்களை உயர்த்தியது.

7. சசிகலாவின் வேண்டாத உறவினர்களின் மீது கஞ்சா வழ்க்கு போட்டது.

8. ஆட்சியின் அவலங்கலை வெளியிடும் எல்லாப் பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்குப் போட்டது.

9. பத்திரிகை ஆசிரியர்களை கைது செய்து சிறையில் தள்ளியது.

10. கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்களைக் கைது செய்தது.

அவரது பேயாட்டம் 2004 பாராளுமன்ற தேர்தல் முடிவு வரும் வரை தொடர்ந்தது.

அம்மையார் ஆட்சியில் இவ்வளவு அனுபவித்தும், அவர் பேச்சைக் கேட்டு, அவருக்குத்தான் எனது வாக்கு என்று சொல்பவர்கள், மேலும் மேலும் துன்பப்படத் தயாராயிருகிறார்கள் என்றுதானே அர்த்தம். வாழ்க ஜனநாயகம்.

Advertisements

Entry filed under: இந்தியா, ஈழத் தமிழர், ஈழம், தமிழ், தமிழ் நாடு, தேர்தல் 2009, பாராளுமன்றம், மக்களவை, வழக்கு. Tags: , , , , , , .

குலவழக்கு துணிச்சல்காரரா ஜெ?

11 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Thevethas  |  3:38 பிப இல் மே 4, 2009

  However Jayalalitha forward person. She will do what she ha told that Eelam will be free if she won majority. She will bent the central as she like! Not like Karunanithy. Sonja Ganthi is dust infron of her. Jayalalitha will be a great hero to Elam Tamil

  மறுமொழி
 • 2. உடன்பிறப்பு  |  3:58 பிப இல் மே 4, 2009

  நல்லாப் பின்னுறீங்க போங்க.

  உங்க அனுமதியின்றி ஒரு கேள்வியையும் , பதிலையும் எடுத்திருக்கிறேன்.

  மன்னிக்கணும்.

  நன்றிகளுடன்
  உடன்பிறப்பு

  மறுமொழி
 • 3. A.PAALNIKKUMAR  |  6:51 பிப இல் மே 4, 2009

  VERY NICE CONTENT , PASS THIS EMAIL TO EVERY ONE IN TAMILNADU BEFORE MAY 13.

  AVIOD JAYA COME BACK.

  மறுமொழி
 • 4. common  |  6:45 முப இல் மே 5, 2009

  Wat ever u said is acceptable…
  the same way explain abt DMK & Karunanithi’s family politics

  1. Dinakaran employees murder
  2. 1500 Cr govt cable opened & closed
  3. 60000 Cr spectrum
  4. abt Srilanka issue.. if he given pressure at september itself
  instead of the resignation drama.. it suppose to be real.. everything comes to end.

  am not supporting admk.. as well as DMK..
  so both of them not eligible

  மறுமொழி
 • 5. pukalini  |  8:08 முப இல் மே 5, 2009

  4,5,10 தப்பா? யாருக்கோ வக்காலத்து வாங்கி பி பக்கத்த புண்ணாக்கியிடாதீங்க…

  மறுமொழி
 • 6. kumar  |  10:09 முப இல் மே 5, 2009

  anbu nanbare idhu ellaam verum kanthudaippu therthaluku kodukkura tips nambaathinga

  மறுமொழி
 • 7. V.Mahadevan  |  1:07 பிப இல் மே 5, 2009

  Timely published. Everybody is under opinion that Jaya is going to sweep. Jaya’s behaviour always different before elections and after elections. If unfortunately she wins, she will make everybodys life miserable. And will not allow any party to rule in the centre smoothly.

  She should be eleminated from politics and for that people has to vote against her

  மறுமொழி
 • 8. RK  |  1:48 பிப இல் மே 5, 2009

  அம்மையார் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை தான். ஆனால் அவர் ஆடியதோடல்லாமல், கவர்மெண்டும் வீரப்பனும் சேர்ந்து ஆடிய ஆட்டத்திற்கு ஆப்பு வைத்தார். அகம்பாவம் பிடித்த அரசு ஊழியர்களுக்கு வேலை என்றால் என்ன, மக்கள் சேவைக்காகவே தாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம், மக்கள் நம்மை நம்பி இல்லை என்று உணர வைத்தார். ரவுடிகள் அட்டகாசத்தை ஒழித்தார். ராசா போல் 60 ஆயிரம் கோடியைக் கொள்ளையடிக்க விட்டுவிட்டு ரகசியம் வெட்ட வெளிச்சமானபின் ‘அவர் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பதற்காகவே இக்கேள்வி’ என்று உளரவில்லை. ஈழத்தில் கொல்லப்படும் எம் குல சகோதர சகோதரிகளின் நிலையை நன்கறிந்தும் வெட்கமில்லாமல் உண்ணாவிரதக் கேவலங்களை அரங்கேற்றவில்லை. பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டு நாங்கள் பண்ணவேயில்லை என்று கூசாமல் புளுகவில்லை. கொள்ளை கொள்ளையாய் மக்கள் வரிப்பணத்தை அவர்களுடைய ஓட்டுக்காக சாலைகளிலும் வீடு வீடாகச் சென்றும் விநியோகிக்கவில்லை. முக்கியமாக, ஓடாத ரயிலின் முன் தலை வைத்துப் படுக்கவில்லை. மேலும், மடத்தனத்தின் எல்லையாக வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று மக்களுக்கு மட்டும் சொல்லி தன் குழந்தைகளை வெளிநாடுகளிலும், முக்கியமாக ஹிந்தி கற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. அட யாரப்பா நியாயம் பேசுவது இங்கே?

  மறுமொழி
 • 9. Keeran  |  4:40 பிப இல் மே 5, 2009

  சங்கரராமனைக் கொலை செய்த சங்கரனைக் கைது செய்தது ஜெயலலிதா செய்தது பேயாட்டமா? கோயில்களில் ஆடு, கோழி பலியிடும் காட்டுமிராண்டி வழக்கத்தை தடைசெய்தது பேயாட்டமா? ஜெயலலிதாவிடம் பல பலவீனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் ஒரு துணிச்சலான அரசியல்வாதி என்ற பெயர் எடுத்திருக்கிறார். கருணாநிதி பாதிக்கிணறு தாவும் அரசியல்வாதி. தனது குடும்பநலனுக்கு பொதுநலனை அடகு வைப்பவர். எடுத்துக்காட்டு அரசு கேபிள் திட்டம். மாறன் உடன்பிறப்புகளோடு சமாதானம் செய்து கொண்டதும் அந்தத் திட்டமும் சட்டமும் கிடப்பில் போடப் பட்டுவிட்டது. தினகரன் ஊழியர்களைக் கொன்றவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? அந்த ஊழியர்கள் என்ன தற்கொலையா செய்து கொண்டார்கள்?

  மறுமொழி
 • 10. oskrishnamurthy  |  1:46 பிப இல் மே 6, 2009

  Arose is a rose is a rose
  A TRUTH IS A TRUTH IS A TRUTH

  மறுமொழி
 • 11. chollukireen  |  9:40 பிப இல் மே 11, 2009

  சொல்ல வேண்டியதை நன்றாகச் சொன்னீர்கள். ஓரளவு பாராட்டு வேறு. துண்டுப் பிரசுரம் அளித்து ஞாபகப்படுத்தி இருந்தால் எங்கேயோ போயிருந்திருக்கலாமா, இதுவே போதுமா?ஞாபகம் வருதே—-ஞாபகம் வருதே

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

காப்பகம்

நாட்காட்டி

மே 2009
ஞா தி செ பு விய வெ
« ஏப்    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

பரிந்துரைக்க

SocialTwist Tell-a-Friend

சாதனைகள் – ஒர் தொகுப்பு

குருவியாரும் பூனையாரும்

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

என்ன படம் பார்க்கலாம்?

★ நியூட்டனின் மூன்றாம் விதி
★ பசங்க
★ குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
★ அயன்
★ அருந்ததீ
★ காஞ்சிவரம்
★ யாவரும் நலம்
★ தநா 07 அல 4777
★ நான் கடவுள்
★ வெண்ணிலா கபடி குழு

HOT net

Swine Flu
Influenza A (H1N1) - WHO Update
WolframAlpha
Revolutionary new web software
TamilNet.com
pro-Tamil News Website
Kosmix.com
Guide to the Web
nano Housing
1 BHK - 3.9 Lacks

%d bloggers like this: