உடம்பைக் குறைக்க உண்ணாவிரதம்

ஏப்ரல் 28, 2009 at 3:52 முப 5 பின்னூட்டங்கள்

எலியார்:  கருணாநிதி எது செய்தாலும் கபட நாடகம் என்று கூறி வரும் அம்மையார், நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தையும் கபட நாடகம் என்று சொல்லியிருக்கிறாரே?

பூனையார்:  பாக்யராஜ் சொல்லும் கதை ஒன்று ஞாபகம் வருகிறது.

ஒரு பணக்கார வியாபாரி வெளியூருக்கு போக வேண்டி இருந்ததால், தன்னுடைய விலை உயர்ந்த மாணிக்கக் கல்லைத் தன் நண்பரிடம் கொடுத்து,  “வைத்துக் கொள்ளுங்கள் வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி ஊருக்குக் கிளம்பினார்.

அந்த நண்பரோ பண்ணையார், பெரிய பணக்காரர்,  இருந்தாலும் அந்த கல்லின் அழகைக்கண்டு அதில் மயங்கிவிட்டார். வியாபாரி திரும்பி வந்துக் கல்லைக் கேட்டபோது, இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று கொடுக்காமல் நாட்கள் கடத்தி வந்தார். இதைப் புரிந்து கொண்ட வியாபாரி அந்த ஊரின் நாட்டாமையிடம் போய் முறையிட்ட்டார்.

நாட்டமை கூப்பிட்டு விசாரிக்கும் போது அதை திரும்ப வியாபாரியிடமே கொடுத்து விட்டதாக அந்தப் பண்ணையார் பொய் கூறினார்.

சரி அதற்கு சாட்சி ஏதாவது இருக்கா என்று நாட்டாமை கேட்டார். அதற்கு தன் வீட்டில் வேலை செய்யும் மூன்று பேர்தான் சாட்சி என்று அவர்களை அழைத்து வந்தார். அவர்கள், சலவைத் தொழிலாளி, சவரத் தொழிலாளி மற்றும் சமையல்க்காரர் ஆவர்.  நாட்டாமை என்ன கேட்டாலும் “ஆமாம் பார்த்தோம்” என்று சொல்ல வேண்டும் என்று மூவரிடமும் அறிவுறித்தியிருந்தார் பண்ணையார்.

இவர் விலை உயர்ந்தக் கல்லைத் திருப்பிக் கொடுப்பதை நீங்கள் நேரில் பார்த்தீர்க்ளா?” என்று நாட்டாமை அவர்களிடம் கேட்டார்.

அவர்கள் முவரும் “ஆமாம் பார்த்தோம்” என்றனர்.

நாட்டமைக்குச் சந்தேகம் வந்தது, நீங்கள் “பண்ணையார் கொடுத்த அந்தக் கல்லைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.

மூவரும் “ஆமாம் பார்த்தோம்” என்றனர்.

அவர்களை தனித் தனியாக் ஒரு அறையில் உக்கரா வைத்து ஆளுக்கு கொஞ்சம் களிமண் கொடுத்து அந்த கல் எப்படி இருந்தது என்று செய்யச் சொன்னார்.அவர்களும் விலை உயர்ந்த கல்லின் வடிவத்தை களிமண்ணில் செய்து நாடாமையிடம் கொடுத்தனர்.  அதைப் பார்த்த பண்ணையார் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு, அந்த மாணிக்கக்கல்லை வியாபாரியிடமே திரும்பக் கொடுத்து அபராதப் பணத்தையும் கட்டினார்.

பண்ணையார் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு அந்த மூவரும் அப்படி என்ன செய்தார்கள்?

விலை உயர்ந்த கல்லைப் பார்த்திருந்தால்தானே அவர்களுக்கு தெரியும் , அதனால் மூவரும் வேகு நேரமாக யோசித்துக் கொண்டே இருந்தார்கள். கடைசியில் சலவைத் தொழிலாளி, சலவைக் கல்லைவிட இந்த உலகத்தில் வேறு என்ன விலை உயர்ந்தக் கல் இருக்கப் போகிறது என களிமண்ணில் சலவைக் கல்லின் உருவத்தைச் செய்தான். சவரத் தொழிலாளி, சவரக் கல்லைவிட இந்த உலகத்தில் வேறு என்ன விலை உயர்ந்தக் கல் இருக்கப் போகிறது என சவரக் கல்லின் உருவத்தைச் செய்தான். சமையற்காரனோ, அம்மிக் கல்லை விட இந்த உலகத்தில் வேறு என்ன விலை உயர்ந்தக் கல் இருக்கப் போகிறது என அம்மிக்கல்லின் உருவத்தைச் செய்தான். அவர்களுக்கு எதைத் தெரியுமோ அதைத்தானேச் செய்வார்கள்.

அதைப்போல,  உடம்பைக் குறைக்க உண்ணாவிரதம் இருந்த நாடகக்காரிக்கு, இதை கபட நாடகம் என்றுதானேச் சொல்லத் தெரியும்?

Advertisements

Entry filed under: ஈழத் தமிழர், ஈழம், உண்ணாவிரதம், சிங்கள இனவாதம், தமிழர் படுகொலை, தமிழ், தமிழ் நாடு, போராட்டம். Tags: , , , , , , .

பல்டி ராணி ஜெயா ஜெயலலிதா சொன்னால் செய்துவிடுவார்?!?

5 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Bala Murugan  |  7:49 முப இல் ஏப்ரல் 28, 2009

  Dear:

  This is wrong, because Mr. Karunanidhi is useless in these matter, he is supporting to Srilankan Govt.

  மறுமொழி
 • 2. Gaja  |  7:50 முப இல் ஏப்ரல் 28, 2009

  Kalainger aatriyathu Kabada naadakam alla. Idhu oru Kevala Naadagam.

  மறுமொழி
 • 3. shiv  |  7:08 பிப இல் மே 2, 2009

  Where was Mr. Karunanidhi all these days. He came to know that the day Srilankan Govt going to stop the attack and then he started this drama. If election was not there then there wont be any such drama. He would have just given a statement as usual

  மறுமொழி
 • 4. common  |  6:49 முப இல் மே 5, 2009

  loosada nee.. last 10 monthsa paathuttu irukka… intha kezha naayi yenna panrannu..

  avanellam manushane illa… yevlo makkal.. nadutheruvula..
  see CNN or BBC news..
  we cann’t live one day like them…

  மறுமொழி
 • 5. RK  |  1:53 பிப இல் மே 5, 2009

  Utter nonsense. She stopped the fasting when VP Singh personally asked her to do so, with a promise that the water will be released. The water came as well. It is no way comparable to what this old man did. It is very well known to the media and the world that the war is not stopped. This guy is still thinking that the masses of Tamil can be fooled just like they did during the 50s till 70s. Now the Tamils are well awake. But if they made him re-elected, even God cannot save this state. Thirutu pasanga.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

காப்பகம்

நாட்காட்டி

ஏப்ரல் 2009
ஞா தி செ பு விய வெ
    மே »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

பரிந்துரைக்க

SocialTwist Tell-a-Friend

சாதனைகள் – ஒர் தொகுப்பு

குருவியாரும் பூனையாரும்

 • RT @vikatan: வேதாந்தாவின் நன்கொடைக்கு மோடியின் கைம்மாறுதான் துப்பாக்கிச்சூடு உத்தரவு! - விளாசும் பிருந்தா காரத் | #BrindaKarat | #NarendraM1 hour ago
 • RT @PChidambaram_IN: காஷ்மீரில் யார் அடுத்த ஆளுனர் என்பது முக்கியம். பாஜக வின் முரட்டு அணுகுமுறையை அடுத்த ஆளுனர் பின்பற்றினால் காஷ்மீரில்… 1 hour ago
 • RT @skpkaruna: வெகு வேகமாக நடந்து கொண்டிருந்த மதுரவாயில் மேல்மட்டச்சாலை திட்டத்தை 7 வருஷமா நிறுத்தி வச்சுருக்கும் ஆட்சியிடம் கேட்கக்கூடிய… 1 hour ago
 • RT @mkstalin: ஜனநாயக நாடா ? போலீஸ் வேட்டைக் காடா? https://t.co/8dQC5fCH6p 1 hour ago
 • RT @karna_sakthi: இந்த மண்ணில் எதை அனுமதிக்க வேண்டும். எதை அனுமதிக்க கூடாது என முடிவெடுக்கும் உரிமை வேறெவரையும் விட உழைக்கும் மக்களுக்கே அ… 1 hour ago

என்ன படம் பார்க்கலாம்?

★ நியூட்டனின் மூன்றாம் விதி
★ பசங்க
★ குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
★ அயன்
★ அருந்ததீ
★ காஞ்சிவரம்
★ யாவரும் நலம்
★ தநா 07 அல 4777
★ நான் கடவுள்
★ வெண்ணிலா கபடி குழு

HOT net

Swine Flu
Influenza A (H1N1) - WHO Update
WolframAlpha
Revolutionary new web software
TamilNet.com
pro-Tamil News Website
Kosmix.com
Guide to the Web
nano Housing
1 BHK - 3.9 Lacks

%d bloggers like this: