பல்டி ராணி ஜெயா

ஏப்ரல் 26, 2009 at 5:14 முப 3 பின்னூட்டங்கள்

எலியார்:  தனி ஈழம்தான் ஒரே தீர்வு, நாங்கள் போராடி தமிழ் ஈழம் பெற்றுத்தருவோம் என அம்மையார் வீர முழக்கம் இட்டிருக்கிறாரே?

பூனையார்:  மிக்க மகிழ்ச்சி.  கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டியதுதான். இப்பொழுதாவது அம்மையாருக்கு  ஞானக் கண் திறந்திருக்கிறதே!

அம்மையார் எவ்வளவு பெரிய பல்டி ராணி என்பதற்கு அவருடைய முந்தைய அட்சியில் ESMA, TESMA சட்டங்ளையும், தேவாலயங்கள், மசூதிகள், ஆடு, கோழிகளை கேட்டால் கூட சொல்லும்.

அது நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டதாலும், நமது மக்களின் மறதி வியாதியினாலும், தற்போதய சேது சமுத்திர திட்டம் பற்றிய அவர் கருத்தினை எடுத்துக் கொள்ளலாம்.

10 ஆண்டுகளாக் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறியவர், இப்பொழுது அத்திட்டத்தை ரத்து செய்வோம் என்று பல்டி அடிக்கிறார். ஏன் என்று கேட்டால் இப்பதான் அத்திட்டத்தைப் பற்றிய முழுத்தகவல்களும் கிடைத்ததாம்.  தகவல் அறியாமலா இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறார்?

இப்போது ஈழம் குறித்தும் பல்டி அடித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழர்களாகிய நாம் ஈழப் பிரச்சினையில் ஒற்றுமை காப்போம் என்று கூறிய போதெல்லாம் மாட மாளிகையிலே உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டு இப்பொழுது கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா?

தனது அரசாங்கம் என்று நம்பிய புலிக்ளிடம் இருந்து தப்பி ஒடிவந்த லட்சக்கணக்கான மக்கள், சிங்கள இனவாத இராணுவச் சிப்பாயிடம் ஒரு வாய் சாப்பாடுக்காகவும் தண்ணீருக்காகவும் வெளிறிய முகத்துடனும் ஒட்டிய வயிற்றுடனும் கையேந்தி நிக்கிறானே அவனிடம் போயாச் சொல்லப் போகிறாய் உனக்கு தமிழ் ஈழம் என்னால் மட்டுமே பேற்றுத்தர முடியும் என்று? வாயில் வைத்த உணவை கூட விழுங்காமல் உன் முகத்தில் காறி உமிழமாட்டானா அந்தத் தமிழன்?

“ஸ்ரீரவிசங்கர் ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றிய சி.டி.க்கள். போட்டோக்கள் கொடுத்தார்.  அதையெல்லாம்  பார்த்தபோது நெஞ்சு கொதிக்கிறது.” என்று கூறியிருக்கிறார் அம்மையார்.  இத்தனை ஆண்டுகளாக வைகோ உன்னிடம் எதைக்காட்டினார். தமிழக மக்களின் நெஞ்சகளிலெல்லாம் முள்ளாக தைத்த அந்த கொடூரப் புகைப்படங்கள் எல்லாம் உன் பார்வைக்கு வரவில்லையா? இல்லை வேறு எந்த சிடியைப் பார்த்துக் கொண்டிருந்தாய்?

நல்ல வேளை தேர்தல் வந்தது உன் வாயில் இருந்து இதையெல்லாம் கேட்பதற்கு.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தாய். இப்பொழுது நானே ஈழத்தைப் பெற்றுத்தருகிறேன் என்கிறாய். இனி என்னவெல்லாம் சொல்வாய் என்று இதோ சொல்கிறேன் பார்…

1. விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் இல்லை, அவர்களும் ஈழ்த்துக்காக போராடும் விடுதலைப் போராளிகள்தான்.
2. ராஜீவ் காந்திய கொன்னது யாருன்னே எனக்குத் தெரியாது, கொலகாரங்க எங்கயோ அமெரிக்காவுலயோ ஆப்பிரிக்காவுலயோ இருக்காங்க.

3. எனது உடன்பிறவாத் தோழியின் உற்ற நன்பர்தான் இந்த பிரபாகரன்.

4. நானும் சசிகல்லாவும் வன்னிக்கே சென்று ஈழ்த் தமிழற்காக சமரில் பங்கு கொள்கிறோம். ம்ம்ம்…கிளப்புங்கள் அந்த ஜாக்சனை!!!

5. ஒட்டுப் பதிவு முடிந்ததும்: ஈழமா அது எங்க இருக்குன்னே எனக்குத் தெரியாது, அப்படி ஒன்னு கெடயவே கெடயாது.

******************************************************************************************************

எலியார்:  தனி ஈழம்தான் ஒரே தீர்வு என வீர முழக்கம் இட்ட அம்மையாருக்குத்தான் எனது ஓட்டு என சிலர் சபதம் எடுத்திருக்கிறார்களே?

பூனையார்:  கலைஞர் சொன்ன கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. என்னதான் நல்ல வசதி வாய்ப்பு இருந்தாலும் மீண்டும் மீண்டும் வலியச் சென்று சவுக்கடி வாங்கும் அடிமைகள்தான் இவர்கள்.

Advertisements

Entry filed under: இந்தியா, ஈழத் தமிழர், ஈழம், கேள்வி பதில், சிங்கள இனவாதம், தமிழர் படுகொலை, தமிழ், தமிழ் நாடு, தேர்தல் 2009, நாடாளுமன்றம், மக்களவை. Tags: , , , , , .

வெற்றிமோகமும் கங்காரு தேசமும் உடம்பைக் குறைக்க உண்ணாவிரதம்

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. tamilini  |  8:46 முப இல் ஏப்ரல் 26, 2009

    உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

    பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

    மறுமொழி
  • 2. nataamai  |  9:03 பிப இல் ஏப்ரல் 26, 2009

    சாட்டை அடீ .. சுப்பர் அப்பு

    மறுமொழி
  • 3. Netrikann  |  3:20 முப இல் ஏப்ரல் 27, 2009

    ‘போரென்றால் மக்கள் மடிவது இயல்புதானே’ என்று யாருக்குமே தெரியாத அறிவியல் கண்டுபிடிப்பை தமிழர்க்கு ஊட்டியவர் தானே புரட்சி பல படைத்த தாய்,
    பூனையார் பட்டியிலிட்டுள்ள யூகங்கள் புரட்சித்தாயின் அறிக்கையாக வெளியிடப்படும், தேர்தலுக்குப் பின்….

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

காப்பகம்

நாட்காட்டி

ஏப்ரல் 2009
ஞா தி செ பு விய வெ
    மே »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

பரிந்துரைக்க

SocialTwist Tell-a-Friend

சாதனைகள் – ஒர் தொகுப்பு

குருவியாரும் பூனையாரும்

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

என்ன படம் பார்க்கலாம்?

★ நியூட்டனின் மூன்றாம் விதி
★ பசங்க
★ குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
★ அயன்
★ அருந்ததீ
★ காஞ்சிவரம்
★ யாவரும் நலம்
★ தநா 07 அல 4777
★ நான் கடவுள்
★ வெண்ணிலா கபடி குழு

HOT net

Swine Flu
Influenza A (H1N1) - WHO Update
WolframAlpha
Revolutionary new web software
TamilNet.com
pro-Tamil News Website
Kosmix.com
Guide to the Web
nano Housing
1 BHK - 3.9 Lacks

%d bloggers like this: