Archive for ஏப்ரல், 2009

ஜெயலலிதா சொன்னால் செய்துவிடுவார்?!?

எலியார்:   “மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதியும், ராஜபட்சவும் இணைந்து சதித் திட்டம் தீட்டியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ராஜபட்சவை தொடர்பு கொண்டு கருணாநிதி பேசியுள்ளார். இலங்கைப் பிரச்னை காரணமாக மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு சாதகமான சூழலும், வெற்றி வாய்ப்பும் மிகவும் பிரகாசமாக உள்ளது. அதிமுக-வின் பேச்சை கேட்கும் மத்திய அரசு அமைந்தால் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழர்கள் நலன்காக்க நடவடிக்கை எடுப்பார். ஜெயலலிதா சொன்னால் செய்துவிடுவார். அவரது முடிவு உறுதியானதாக இருக்கும்.

தன்னலத்துக்காக.. இலங்கைக்கு இந்திய ராணுவம் வராமல் தடுக்க வேண்டுமெனில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளான மே 13-ம் தேதி வரை உண்மையாக போர்நிறுத்தம் செய்யுங்கள். அவ்வாறு செய்தால் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் எனது பேச்சை கேட்கும் மத்திய அரசு அமையும். அப்போது உங்கள் விருப்பம்போல இலங்கையில் அனைத்து வேலைகளையும் செயல்படுத்தலாம். எனவே, தேர்தலில் நீங்கள் எனக்கு உதவ வேண்டும். தேர்தலுக்குப் பின் நான் உங்களுக்கு உதவுவேன் எனக் கூறியுள்ளார் கருணாநிதி.”

என்று அம்மையார் பொதுக்கூட்டத்தில்
பேசியுள்ளாரே?

எலியார்:  பூனையார் சிரித்த சிரிப்பில் ஊரே கூடிவிட்டது. அப்புறம் எங்கிருந்து பதில் எழுதுவது. அவர் எதால் சிரித்தார் என்று கேட்கவில்லையே?…வேண்டாம் அதை இங்கே எழுத முடியாது!

Advertisements

ஏப்ரல் 30, 2009 at 2:27 முப பின்னூட்டமொன்றை இடுக

உடம்பைக் குறைக்க உண்ணாவிரதம்

எலியார்:  கருணாநிதி எது செய்தாலும் கபட நாடகம் என்று கூறி வரும் அம்மையார், நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தையும் கபட நாடகம் என்று சொல்லியிருக்கிறாரே?

பூனையார்:  பாக்யராஜ் சொல்லும் கதை ஒன்று ஞாபகம் வருகிறது.

ஒரு பணக்கார வியாபாரி வெளியூருக்கு போக வேண்டி இருந்ததால், தன்னுடைய விலை உயர்ந்த மாணிக்கக் கல்லைத் தன் நண்பரிடம் கொடுத்து,  “வைத்துக் கொள்ளுங்கள் வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி ஊருக்குக் கிளம்பினார்.

அந்த நண்பரோ பண்ணையார், பெரிய பணக்காரர்,  இருந்தாலும் அந்த கல்லின் அழகைக்கண்டு அதில் மயங்கிவிட்டார். வியாபாரி திரும்பி வந்துக் கல்லைக் கேட்டபோது, இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று கொடுக்காமல் நாட்கள் கடத்தி வந்தார். இதைப் புரிந்து கொண்ட வியாபாரி அந்த ஊரின் நாட்டாமையிடம் போய் முறையிட்ட்டார்.

நாட்டமை கூப்பிட்டு விசாரிக்கும் போது அதை திரும்ப வியாபாரியிடமே கொடுத்து விட்டதாக அந்தப் பண்ணையார் பொய் கூறினார்.

சரி அதற்கு சாட்சி ஏதாவது இருக்கா என்று நாட்டாமை கேட்டார். அதற்கு தன் வீட்டில் வேலை செய்யும் மூன்று பேர்தான் சாட்சி என்று அவர்களை அழைத்து வந்தார். அவர்கள், சலவைத் தொழிலாளி, சவரத் தொழிலாளி மற்றும் சமையல்க்காரர் ஆவர்.  நாட்டாமை என்ன கேட்டாலும் “ஆமாம் பார்த்தோம்” என்று சொல்ல வேண்டும் என்று மூவரிடமும் அறிவுறித்தியிருந்தார் பண்ணையார்.

இவர் விலை உயர்ந்தக் கல்லைத் திருப்பிக் கொடுப்பதை நீங்கள் நேரில் பார்த்தீர்க்ளா?” என்று நாட்டாமை அவர்களிடம் கேட்டார்.

அவர்கள் முவரும் “ஆமாம் பார்த்தோம்” என்றனர்.

நாட்டமைக்குச் சந்தேகம் வந்தது, நீங்கள் “பண்ணையார் கொடுத்த அந்தக் கல்லைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.

மூவரும் “ஆமாம் பார்த்தோம்” என்றனர்.

அவர்களை தனித் தனியாக் ஒரு அறையில் உக்கரா வைத்து ஆளுக்கு கொஞ்சம் களிமண் கொடுத்து அந்த கல் எப்படி இருந்தது என்று செய்யச் சொன்னார்.அவர்களும் விலை உயர்ந்த கல்லின் வடிவத்தை களிமண்ணில் செய்து நாடாமையிடம் கொடுத்தனர்.  அதைப் பார்த்த பண்ணையார் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு, அந்த மாணிக்கக்கல்லை வியாபாரியிடமே திரும்பக் கொடுத்து அபராதப் பணத்தையும் கட்டினார்.

பண்ணையார் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு அந்த மூவரும் அப்படி என்ன செய்தார்கள்?

விலை உயர்ந்த கல்லைப் பார்த்திருந்தால்தானே அவர்களுக்கு தெரியும் , அதனால் மூவரும் வேகு நேரமாக யோசித்துக் கொண்டே இருந்தார்கள். கடைசியில் சலவைத் தொழிலாளி, சலவைக் கல்லைவிட இந்த உலகத்தில் வேறு என்ன விலை உயர்ந்தக் கல் இருக்கப் போகிறது என களிமண்ணில் சலவைக் கல்லின் உருவத்தைச் செய்தான். சவரத் தொழிலாளி, சவரக் கல்லைவிட இந்த உலகத்தில் வேறு என்ன விலை உயர்ந்தக் கல் இருக்கப் போகிறது என சவரக் கல்லின் உருவத்தைச் செய்தான். சமையற்காரனோ, அம்மிக் கல்லை விட இந்த உலகத்தில் வேறு என்ன விலை உயர்ந்தக் கல் இருக்கப் போகிறது என அம்மிக்கல்லின் உருவத்தைச் செய்தான். அவர்களுக்கு எதைத் தெரியுமோ அதைத்தானேச் செய்வார்கள்.

அதைப்போல,  உடம்பைக் குறைக்க உண்ணாவிரதம் இருந்த நாடகக்காரிக்கு, இதை கபட நாடகம் என்றுதானேச் சொல்லத் தெரியும்?

ஏப்ரல் 28, 2009 at 3:52 முப 5 பின்னூட்டங்கள்

பல்டி ராணி ஜெயா

எலியார்:  தனி ஈழம்தான் ஒரே தீர்வு, நாங்கள் போராடி தமிழ் ஈழம் பெற்றுத்தருவோம் என அம்மையார் வீர முழக்கம் இட்டிருக்கிறாரே?

பூனையார்:  மிக்க மகிழ்ச்சி.  கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டியதுதான். இப்பொழுதாவது அம்மையாருக்கு  ஞானக் கண் திறந்திருக்கிறதே!

அம்மையார் எவ்வளவு பெரிய பல்டி ராணி என்பதற்கு அவருடைய முந்தைய அட்சியில் ESMA, TESMA சட்டங்ளையும், தேவாலயங்கள், மசூதிகள், ஆடு, கோழிகளை கேட்டால் கூட சொல்லும்.

அது நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டதாலும், நமது மக்களின் மறதி வியாதியினாலும், தற்போதய சேது சமுத்திர திட்டம் பற்றிய அவர் கருத்தினை எடுத்துக் கொள்ளலாம்.

10 ஆண்டுகளாக் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறியவர், இப்பொழுது அத்திட்டத்தை ரத்து செய்வோம் என்று பல்டி அடிக்கிறார். ஏன் என்று கேட்டால் இப்பதான் அத்திட்டத்தைப் பற்றிய முழுத்தகவல்களும் கிடைத்ததாம்.  தகவல் அறியாமலா இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறார்?

இப்போது ஈழம் குறித்தும் பல்டி அடித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழர்களாகிய நாம் ஈழப் பிரச்சினையில் ஒற்றுமை காப்போம் என்று கூறிய போதெல்லாம் மாட மாளிகையிலே உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டு இப்பொழுது கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா?

தனது அரசாங்கம் என்று நம்பிய புலிக்ளிடம் இருந்து தப்பி ஒடிவந்த லட்சக்கணக்கான மக்கள், சிங்கள இனவாத இராணுவச் சிப்பாயிடம் ஒரு வாய் சாப்பாடுக்காகவும் தண்ணீருக்காகவும் வெளிறிய முகத்துடனும் ஒட்டிய வயிற்றுடனும் கையேந்தி நிக்கிறானே அவனிடம் போயாச் சொல்லப் போகிறாய் உனக்கு தமிழ் ஈழம் என்னால் மட்டுமே பேற்றுத்தர முடியும் என்று? வாயில் வைத்த உணவை கூட விழுங்காமல் உன் முகத்தில் காறி உமிழமாட்டானா அந்தத் தமிழன்?

“ஸ்ரீரவிசங்கர் ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றிய சி.டி.க்கள். போட்டோக்கள் கொடுத்தார்.  அதையெல்லாம்  பார்த்தபோது நெஞ்சு கொதிக்கிறது.” என்று கூறியிருக்கிறார் அம்மையார்.  இத்தனை ஆண்டுகளாக வைகோ உன்னிடம் எதைக்காட்டினார். தமிழக மக்களின் நெஞ்சகளிலெல்லாம் முள்ளாக தைத்த அந்த கொடூரப் புகைப்படங்கள் எல்லாம் உன் பார்வைக்கு வரவில்லையா? இல்லை வேறு எந்த சிடியைப் பார்த்துக் கொண்டிருந்தாய்?

நல்ல வேளை தேர்தல் வந்தது உன் வாயில் இருந்து இதையெல்லாம் கேட்பதற்கு.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தாய். இப்பொழுது நானே ஈழத்தைப் பெற்றுத்தருகிறேன் என்கிறாய். இனி என்னவெல்லாம் சொல்வாய் என்று இதோ சொல்கிறேன் பார்…

1. விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் இல்லை, அவர்களும் ஈழ்த்துக்காக போராடும் விடுதலைப் போராளிகள்தான்.
2. ராஜீவ் காந்திய கொன்னது யாருன்னே எனக்குத் தெரியாது, கொலகாரங்க எங்கயோ அமெரிக்காவுலயோ ஆப்பிரிக்காவுலயோ இருக்காங்க.

3. எனது உடன்பிறவாத் தோழியின் உற்ற நன்பர்தான் இந்த பிரபாகரன்.

4. நானும் சசிகல்லாவும் வன்னிக்கே சென்று ஈழ்த் தமிழற்காக சமரில் பங்கு கொள்கிறோம். ம்ம்ம்…கிளப்புங்கள் அந்த ஜாக்சனை!!!

5. ஒட்டுப் பதிவு முடிந்ததும்: ஈழமா அது எங்க இருக்குன்னே எனக்குத் தெரியாது, அப்படி ஒன்னு கெடயவே கெடயாது.

******************************************************************************************************

எலியார்:  தனி ஈழம்தான் ஒரே தீர்வு என வீர முழக்கம் இட்ட அம்மையாருக்குத்தான் எனது ஓட்டு என சிலர் சபதம் எடுத்திருக்கிறார்களே?

பூனையார்:  கலைஞர் சொன்ன கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. என்னதான் நல்ல வசதி வாய்ப்பு இருந்தாலும் மீண்டும் மீண்டும் வலியச் சென்று சவுக்கடி வாங்கும் அடிமைகள்தான் இவர்கள்.

ஏப்ரல் 26, 2009 at 5:14 முப 3 பின்னூட்டங்கள்

வெற்றிமோகமும் கங்காரு தேசமும்

எலியார்:  ஈழ இலக்கியம் ச்ம்பந்தமான புத்தகத்தை வெளியிட வெற்றிமோகம் எழுத்தாளர் கங்காரு தேசத்துக்கு சென்றிருக்கிறாரே?

பூனையார்:  ஈழ இலக்கியம் ச்ம்பந்தமான புத்தகம் என்றால் வன்னியில்தானே வெளியிடனும், இவர் என்ன கங்காரு தேசம் போயிருக்கிறார்?  இதையெல்லாம் கேட்க ஆள் இல்லையா?

***************************************************************

பாகவதமும்  பாராகிராஃபரும்

எலியார்: எழுத்தாளர் பாராகிராஃபர் தலைவர் மெர்சிமணி மீது வசை மாரி பொழிகிறாரே?

பூனையார்: மெர்சிமணி ஒன்றும் அவாள் இல்லையே?  அவாள் என்ன கிறுக்குத்தனம் செய்தாலும் பேஷ் பேஷ் என்பார். பாகவதத்தைப் போற்றும் பாராகிராஃபரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

ஏப்ரல் 25, 2009 at 10:02 பிப பின்னூட்டமொன்றை இடுக

கிலி பிடித்த பூனையார்

எலியார்:  பூனையார்  சொல்கிறார், பூனையார் சொல்கிறார் என்று பதிவுகளில் உள்ளதே, அப்படியென்றால் பூனையார் இந்த பதிவுகளை எழுதவில்லையா என   பொதுமக்கள் கேட்கிறார்களே?

பூனையார்:  என்னதான் விரட்டி விரட்டி எலி பிடித்தாலும்,  பதிவேற்றம் செய்யனும் என்றால் “வெயிட் தூக்கியதால் குள்ளமான” எழுத்தாளரைப் போல,  இந்த பூனையாருக்கும் கிலி பிடித்து விடுகிறது.

அதனால் WordPressல் பதிவேற்றம் செய்ய யாராவது எளிமையான் மென்பொருளை உருவாக்குகிறவரை பூனையார் சொல்லச் சொல்ல எலியார் பதிவேற்றுவார்.

ஏப்ரல் 25, 2009 at 9:48 பிப பின்னூட்டமொன்றை இடுக

குட்டு வாங்குறதுக்குதான் கலைஞர்

சீனாவும், ரஷ்யாவும் நேரடியாகவே இலங்கைக்கு பண உதவியும், ஆயுத உதவியும் செய்து வருகின்றன. அதோடு, இலங்கைப்பிரச்சினை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) பாதுகாப்புக் குழு (Security Council) கூடும்போதெல்லம், வெட்டோ (Vetto) அதிகாரத்தைப் பயன்படுத்தி பேச விடாமல் தடை செய்கின்றன.

அனால், இங்கே நாம் சீனத் தயாரிப்பு மலிவு விலைப் பொருட்களையும், ரஷ்யாவின் “MTS” நிறுவனத்தின்  SIM Card வாங்கிகொண்டிருக்கிறோம் . இப்படி நம் பணத்தையும் நேரடியாகவே ராஜபக்சே கைகளுக்குப் கொண்டு போய் சேர்க்கிறது சீனாவும் ரஷ்யாவும்.

இதைப் பற்றியெல்லாம் நாம் ஏன் கவலைப்படப் போகிறோம், நமக்குத்தான் எல்லாவற்றுக்கும் குட்டு வாங்க கலைஞர் கருணாநிதி இருக்கிறாரே! என்கிறார் பூனையார்

ஏப்ரல் 25, 2009 at 6:32 முப பின்னூட்டமொன்றை இடுக

புலி எதிர்ப்பு வாடை

தேசம்நெற் இணையதளம் பிரித்தானிய தமிழ் எழுத்த்ழர்களால் குறிப்பாக ஈழத்தமிழ் எழுத்தாழர்களால் நாடாத்தப்படுகிறது. ஈழத் தமிழர் போரட்டங்கள், ஈழத்து செய்திகள், ஈழ எழுத்தாளர்க்ளின் கருத்துக்கள் போன்றவை பதிவேற்றம் இங்கே செய்யப்படுகின்றது.

அதில் இருக்கும் பதிவுகளிலும், மறு மொழிகளிலும் பெரும்பாலும் புலி எதிர்ப்பு வாடையே வீசுகிறது.
உதாரண்த்திற்கு சமீபத்திய இந்த பதிவு

தமிழக காங்கிரசாரைப் போலவே, ஈழ மக்களிடமும் அயிரத்து எட்டு கோஷ்டிகள் இருக்கும் போலும்! ஆளுக்கு ஒரு தலைவர், ஆளாலுக்கு ஒரு கொள்கைன்னுதான் இருக்காங்க. அந்த பதிவுகள் எல்லாம் படிச்சா கண்ணக்கட்டிக்கிட்டு வருதேங்குறாரு பூனையாரு.

ஏப்ரல் 25, 2009 at 6:10 முப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


அண்மைய பதிவுகள்

காப்பகம்

நாட்காட்டி

ஏப்ரல் 2009
ஞா தி செ பு விய வெ
    மே »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

பரிந்துரைக்க

SocialTwist Tell-a-Friend

சாதனைகள் – ஒர் தொகுப்பு

குருவியாரும் பூனையாரும்

  • RT @chinna_charlie: கமல்-கொளதமி @skpkaruna 👌 https://t.co/YHV8QSuR0H 1 hour ago
  • RT @AdmkFails: ஆடம்பர திருடிக்கு சிலையும், மண்டபமும் 😐 #AdmkFails https://t.co/XzScMgbJMR 1 hour ago
  • RT @CarDroidusMax: Sanghiyo, mitron, excel sheet chutiyon: this is how Kerala deals with a mob-lynching. We don’t do your thing of arrestin… 1 hour ago
  • RT @ivanganeshk_s: கொலை செய்து சிலை வச்சானுங்க இதுலயும் ஹைலைட்டு சிலையவும் கொலை செஞ்சே வச்சிருக்கானுங்க....! 2 hours ago
  • RT @kryes: /தமிழ் மற்றும் பிறமொழி/ = இதான் தமிழ்ப் பண்பாடு! /Her Contribution to HINDI Cinema/ = இதான் சங்கி 'கலாச்சாரம்'! பல நேரங்களில்… 4 hours ago

என்ன படம் பார்க்கலாம்?

★ நியூட்டனின் மூன்றாம் விதி
★ பசங்க
★ குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
★ அயன்
★ அருந்ததீ
★ காஞ்சிவரம்
★ யாவரும் நலம்
★ தநா 07 அல 4777
★ நான் கடவுள்
★ வெண்ணிலா கபடி குழு

HOT net

Swine Flu
Influenza A (H1N1) - WHO Update
WolframAlpha
Revolutionary new web software
TamilNet.com
pro-Tamil News Website
Kosmix.com
Guide to the Web
nano Housing
1 BHK - 3.9 Lacks